# Tags
#இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ரஷ்ய பிரஜை காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ பகுதியில் இன்று (மார்ச் 15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ரஷ்ய பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த வெளிநாட்டவர் பயணித்த கார், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, லொறி ஒன்றின் பின்னால் மோதியுள்ளது. குறித்த கார் பின்னதுவ நுழைவாயிலில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை தொடர்ந்து காரின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விபத்தையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் காருக்குள் சிக்கியிருந்த ரஷ்ய பிரஜையை மீட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.