அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகள் !

Date:

அவுஸ்திரேலியாவின் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகள் வெறுமனே பார்வையிடுவதற்கான காட்சிப்பொருட்களாக என சீன அதிகாரியொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி திட்டம் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சீனஅதிகாரியொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்ட சந்திப்பின் போது சீன பிரதிநிதி இவ்வாறு கேள்விஎழுப்பியுள்ளார்.

இந்த அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிதிட்டம் சர்வதேச அணுவாயுதபரவல் உடன்படிக்கைக்கு மாறானது என்ற சீனாவின் நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே சீன பிரதிநிதி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த படகுகள் எதற்கு வெறுமனே பார்வையிடுவதற்கா என சீன அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் இது குறித்து பதிலளிக்க மறுத்துள்ளது.

சீனாவுடனான உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

நான் சீனாவுடன் தொடர்ந்து ஈடுபாட்டை பேணுவது குறித்து ஆர்வமாக உள்ளேன்,எந்த விடயத்தில் ஒத்துழைக்கமுடியுமோ அந்த விடயத்தில் ஒத்துழைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்கு இணங்கமறுக்கவேண்டுமோ அங்கு இணக்க மறுப்போம் தேசிய நலன் குறித்த விடயத்தில் ஈடுபட்டை பேணுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அக்கஸ் அணுசக்தியி;ல் இயங்கும் நீர்மூழ்கிகளை கொள்வளவு செய்யும் திட்டம் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் சீன அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை கொள்வனவு செய்யும் திட்டம் குறி;த்து பல நாடுகளிற்கு செய்தியாளர் மாநாட்டின் மூலம் அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியாளர் மாநாட்டில் சீன தூதரக பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர் எனினும் சீன தூதுவர் கலந்துகொள்ளவில்லை

நீர்மூழ்கி திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதும் சீனா அதனை கடுமையாக எதிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அக்கஸ் நாடுகளுடன் சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ள சீனா இந்த உடன்படிக்கை பிராந்தியத்திற்கு ஆபத்தானது அணுவாயுத பரவல் தடுப்பை பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...