நியூசிலாந்து அணி 2 விக்கட்டுக்களை இழந்து 155 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
வெலிங்கடனில் நடைபெற்றுவரும் குறித்த போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூசிலாந்து அணி 2 விக்கட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
சீரற்ற வானிலை காரணமாக இன்றைய நாளில் 48 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
நியூசிலாந்து அணி சார்பில் டெவோன் கொன்வே 78 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு, கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களுடனும் ஹென்ரி நிக்கோலஸ் 18 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் கசுன் ரஜித மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கட்டுக்கள் வீதம் வீழ்த்தியுள்ளனர்.