இலங்கைக்கு முதல் கட்டமாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்

Date:

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு உதவியளிக்க சர்வதேச நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் அளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெறவுள்ளது.

இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை பெறும். 48 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட கடன்வசதியின் கீழ் இலங்கைக்கு குறித்த தொகை வழங்கப்படும். இந்த மாத ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு அமைவாக இலங்கைக்கு பாரிஸ் கிளப், சீனா, இந்தியா உள்ளிட்ட உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின் நிதி உத்தரவாதம் கிடைத்தது.

இந்தநிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இந்த அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கைக்கு முதல் கட்டமாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....