17 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்!

Date:

கொழும்பில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேக நபருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பதினேழு வயது மாணவியும் பொலிஸாரால் பொறுப்பேற்க்கப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேலையில்லாத நபர் என தெரிவிக்கப்படுகிறது.

 

பாடசாலைக்குச் சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என மாணவியின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தனது மகள் சுமார் ஆறு வருடங்களாக இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக அவரது தாய் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

பலமுறை எச்சரித்தும் மகள் உறவை நிறுத்தவில்லை எனவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

2000 ரூபா தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

பொது மக்கள் தம்வசம் வைத்திருக்கும் ரூ.2000 ரூபாய் இந்திய நாணயத்தாள்களை இந்திய...

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சிறைத் தண்டனை

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில்...

பாகிஸ்தானில் ரயில் விபத்து !

பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதியதில் நேற்று (24)...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம்...