உணவு என்ற போர்வையில் கஞ்சா விநியோகித்த குடு சலிந்துவின் சகா கைது!

Date:

போதைப்பொருள் வர்த்தகரான குடு சலிந்துவின் நெருங்கிய சகா ஒருவர் நேற்று விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

விசேட அதிரடிப்படைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவு III இன் அதிகாரிகளால், பாணந்துறை – ஹொரண வீதியில், 33 வயதுடைய குறித்த நபர், 10 கிலோகிராம் கஞ்சா மற்றும் ஒரு இலட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் உணவு விநியோகம் என்ற போர்வையில் குறித்த போதைப்பொருட்களை உந்துருளியில் கொண்டு சென்றுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் பாணந்துறையில் போதைப்பொருள் வலையமைப்பைக் கையாண்டவர் எனவும் பாதாள உலகக்குழு உறுப்பினர் குடு சலிந்துவின் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்துநராகவும், தற்போது துபாயில் இருப்பதாக கூறப்படும் பெலியத்த ரணாவின் நிதி விவகாரங்களையும் கையாண்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....