நடுவானில் பைலட் திடீர் மயக்கம் பயணியாக சென்ற விமானி உதவி

Date:

லாஸ் வேகாஸ்,-அமெரிக்காவில், நடுவானில் விமானம் பறந்த சமயத்தில், இரு பைலட்டுகளில் ஒருவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, பயணியாகச் சென்ற வேறொரு விமான நிறுவனத்தைச் சேர்ந்த பைலட் விமானம் தரையிறங்க உதவியது, பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ‘சவுத்வெஸ்ட்’ விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம், சமீபத்தில் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து கொலம்பஸ் நகருக்கு சென்றது.

அப்போது, விமானத்தை இயக்கிய பைலட்டுகளில் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவ உதவிக்காக விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

மற்றொரு பைலட்டால் நிலைமையை சமாளிக்க முடியாத சூழலில், அதே விமானத்தில் பயணித்த வேறொரு விமான நிறுவனத்தைச் சேர்ந்த பைலட் ஒருவர், ‘காக்பிட்’ அறைக்குள் நுழைந்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

பின், விமானத்தை லாஸ் வேகாஸ் விமான நிலையத்தில் தரையிறக்கவும் உதவினார்.

மயக்கமடைந்த பைலட் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆபத்தான சமயத்தில் தானாக முன்வந்து உதவிய பைலட் பயணிக்கு, விமான பயணியரும், ஊழியர்களும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம்...

இந்தியாவின் ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு

சுமார் 20 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வௌியிட்டுள்ளதாக ரயில்வே...

சாதனை படைத்த நாஸா (NASA)

ஆஸ்டிராய்ட் எனப்படும் சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்காவின்...

70 இலட்சம் ரூபா பணம் கொள்ளை !

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தைக்காட்டி அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக...