கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி வெடிகுண்டு மிரட்டல்.

Date:

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு போலியான அழைப்பு விடுத்ததாக கூறப்படும் 14 வயது பாடசாலை மாணவன் ஒருவனை விமான நிலைய காவல்துறையினர் நேற்று  25 ம் திகதி கைது செய்துள்ளனர்.

குறித்த பாடசாலை மாணவர் நேற்று 25 ம் திகதி விமான நிலையத்தின் அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பை விடுத்து, விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, முனையத்தை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தபோது, ​​சில நிமிடங்களில் மாணவர் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு அச்சுறுத்தல் இல்லை என்றும் அது நகைச்சுவை என்றும் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

களுபோவில பிரதேசத்தில் வசித்துவரும் சந்தேகநபரான மாணவனை காவல்நிலையத்துக்கு அழைத்து, பின்விளைவுகளை உணராமல் மேற்கொள்ளப்பட்ட அழைப்பு குறித்து காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

தான் செய்த செயலின் தீவிரம் தனக்கு தெரியவில்லை என சிறுவன் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்ததையடுத்து, கடுமையாக எச்சரிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....