விவசாய அதிகாரி கொலை- “டேனி பேபி” கைது!

Date:

இன்று காலை (27) தங்காலை பொலிஸ் பிரிவில் வெலியார-நெதொல்பிட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 30 வயதான  என்ற அப்பகுதியில் விவசாய ஆராய்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்த திருமணமான பெண் என தெரியவருகிறது.

உயிரிழந்த பெண் தான் வசிக்கும் அதே பகுதியில் பணிபுரிந்து வந்ததோடு, இன்று வீட்டில் இருந்து வயல் பணிக்காக சென்றுக்கொண்டிருந்த போது, ​​நேற்று முன்தினம் ஏற்பட்ட பணி பிரச்சனை காரணமாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 41 வயதான ஜயவர்தன பத்திரனகே சரத் எனப்படும் ‘டேனி பேபி’ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தங்காலை நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....