IPL 2023 :- தனது முதல் வெற்றியை பதித்த பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ்!

Date:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5வது லீக் போட்டி பெங்களூருவில் நேற்றிரவு நடைபெற்றது.

இதில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்களை எடுத்தது.

அந்த அணியின் திலக் வர்மா 46 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 84 ஓட்டங்கள் (நாட் அவுட்) குவித்தார். பெங்களூரு அணி சார்பில் கரண் சர்மா 2 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, டூ பிளசிஸ் ஜோடி அதிரடியில் இறங்கியது. பந்துகள் சிக்சர், பவுண்டரிகளாக பறந்தன.

இருவரும் அரை சதமடித்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு விராட் கோலி, டூ பிளசிஸ் ஜோடி 148 ஓட்டங்கள் குவித்தது.

டூ பிளசிஸ் 73 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில், பெங்களூரு அணி 172 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

விராட் கோலி 49 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உட்பட82 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....