உலக நீர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கிடையிலான சுவரொட்டிப் போட்டி

உலக நீர் தினம் 2023 ஐ முன்னிறுத்தி பாடசாலை மாணவர்களிடையேயான சுவரொட்டிப் போட்டியொன்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நடாத்தப்படவுள்ளது.
இவ்வருட உலக நீர் தின கருப்பொருளான ‘நீர் மற்றும் சுகாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான மாற்றத்தை துரிதப்படுத்துவதாகும்’ (Accelerating change to solve the water and sanitation crisis) எனவே இக் கருப்பொருளுக்கு அமைவாக ஆக்கங்களை மாணவர்கள் தயாரிக்க வேண்டும்.
குறித்த போட்டியில் வெற்றி பெறுகின்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களை ஒன்றிணைத்து கிளிநொச்சியில் இடம்பெறும் உலக நீர் தின நிகழ்வில் வழங்கப்படும்.
போட்டிகள் நான்கு பிரிவாக நடாத்தப்படவுள்ளன அந்த வகையில்
பிரிவு 01 – தரம் 03 தொடக்கம் 05 வரை,
பிரிவு 02 – தரம் 06 தொடக்கம் 09 வரை,
பிரிவு 03- தரம் 10 தொடக்கம்11 வகுப்புகளுக்கும்,
பிரிவு 04- உயர் தரத்திற்கும் என பிரிக்கப்பட்டுள்ளன.
சுவரொட்டிகள் A4 அளவுத்திட்டத்தில் தயாரிக்கப்படவேண்டும். கைகளால் தயாரிக்கப்படவேண்டும் (கணினி சார் தொழில்நுட்பங்கள் பாவிக்கப்பட்ட முடியாது) மாணவர்களின் ஆக்கமானது அதிபரினால் அல்லது பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்களால் உறுதிப்படுத்தப்படுவதோடு மாணவர் பெயர், தரம், பாடசாலை என்பன தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்கள் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில் வழங்கப்படுவதோடு தெரிவு செய்யப்படும் அனைத்து சுவரொட்டிகளும் நிகழ்வில் காட்சிப்படுத்தப்படும்
ஆக்கங்கள் அனைத்தும் 15.03.2023 ற்கு முன்னதாக பிரதிப் பொதுமுகாமையாளர் அலுவலகம் பிராந்திய சேவைகள் நிலையம் – வடக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வவுனியா அல்லது அல்லது உங்களது பிரதேசத்தில் உள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் நேரடியாகவோ அல்லது dgm.section@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்க முடியும்.