பூமியை நோக்கி அதிபயங்கர வேகத்தில் சீறிவரும் சிறியகோள்…!

Date:

கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. அதிலிருந்து அவ்வப்போது சில சிறு, குறுங்கோள்கள் அழையா ‘அதிரடி’ விருந்தாளியாய் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துவிடுவது உண்டு.

ஆனால் அவை பூமியின் வளிமண்டலத்துக்குள் பிரவேசித்ததுமே எரிந்து பொசுங்கிவிடுவது அல்லது உடைந்து சிதறிவிடும். மிக அரிதாக சில சிறுகோள்கள் அல்லது எரிநட்சத்திரங்கள் மட்டும் பூமிப் பரப்பை அசுர ‘முத்தம்’ இட்டதும் நடந்திருக்கிறது. அதன் தாக்கமும் கடுமையாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவான பெரும்பள்ளங்கள் இன்றும் பூமியின் முகத்தில் ‘தழும்புகளாய்’ காட்சி அளிக்கின்றன.

எனவே, பாறை, உலோகம் அல்லது பனியால் ஆன இந்த சிறு, குறுங்கோள்கள் பூமியை நெருங்கிவரும்போது, அமெரிக்காவின் ‘நாசா’ போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விழிப்போடு கண்காணிக்கின்றன.

அதன் விளைவாக, மணிக்கு 67 ஆயிரத்து 656 கி.மீ. என்ற அதிபயங்கர வேகத்தில், 150 அடி விட்டம் கொண்ட ஒரு சிறுகோள், பூமியை நோக்கி சீறிவருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு விமானத்தின் அளவிலான, பாறையாலான ‘2023 எப்இசட்3’ என்ற அந்த சிறியகோள், நாளை (6-ம் திகதி) பூமியை ‘நெருங்கி’ வருகிறது. அச்சப்பட வேண்டாம். இந்த சிறுகோள் சுமார் 26 லட்சத்து 10 ஆயிரம் மைல் தொலைவில் பூமிக்கு அருகில் வந்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லப்போகிறது. பல லட்சம் கி.மீ. தூரம் என்றாலும், விண்வெளி பார்வையில் ‘அருகில்’ தான் இந்த சிறுகோள் ‘கொஞ்சம்’ பக்கத்தில் வந்தாலும், ஆபத்தில்லை என்பதில் நாம் அமைதியடையலாம்!

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....