பின்லாந்து மக்களின் மகிழ்ச்சி நீடிக்குமா..!

Date:

ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், ரஷ்யாவின் எல்லையில் உள்ள பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ராணுவ அமைப்பாக விளங்குகிறது நேட்டோ…. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுடன், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 28 ஐரோப்பிய நாடுகளும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன..இந்த நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேட்டோவின் 31வது நாடாக தன்னை இணைத்துக்கொண்டது பின்லாந்து.

ரஷ்யாவுடன் சுமார் ஆயிரம் கிலோ மீட்டருக்கும் மேல் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் பின்லாந்து, நேட்டோவில் இணைந்திருப்பது உலக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால், ரஷ்யாவுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், நேட்டோவின் உறுப்பு நாடுகள் பின்லாந்து எல்லைக்கு ராணுவ துருப்புகளை அனுப்பக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படி நேர்கையில், தகுந்த பதிலடி அளிப்போம் என ரஷ்யாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் வெளியான ஆய்வு ஒன்றில், உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தேர்வானது.தற்போதைய சூழ்நிலையை உற்றுநோக்கும்போது பின்லாந்து மக்களின் மகிழ்ச்சி நீடிக்குமா என்பது சந்தேகமே.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...