அணு ஆயுத சோதனையை வடகொரியா மீண்டும் கடலுக்கு அடியில்

Date:

வடகொரியா தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை சோதித்து கொரிய தீபகற்பத்தை பதற்றத்தில் வைத்துள்ளது. மேலும் வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடும் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் வடகொரியா மிரட்டி வருகிறது.

இந்த சூழலில் கடந்த மாத இறுதியில் செயற்கையாக சுனாமியை ஏற்படுத்தும் ‘ஹெய்ல்-1’ என்ற புதிய அணு ஆயுத்தை கடலுக்கு அடியில் வடகொரியா சோதித்தது. இதற்கு உலக நாடுகளிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வடகொரியா மீண்டும் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது.

இது குறித்து வடகொரியா அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “நாட்டின் கிழக்கு கடற்கரையில் இருந்து செலுத்தப்பட்ட ‘ஹெய்ல்-2’ அணு ஆயுதம் 71 மணி நேரத்துக்கும் மேலாக நீருக்கடியில் பயணித்து துறைமுக நகரமான டான்சோன் அருகே நிறுத்தப்பட்டிருந்த மாதிரி போர்க்கப்பலை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. சமீபத்திய இந்த சோதனை ‘ஹெய்ல்-2’ அணு ஆயுதம் 1,000 கி.மீ. வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

வடகொரியாவின் இந்த அடாவடி போக்கால் கொரிய தீபகற்பத்தில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....