ஐ.நா. அமைப்புகளுக்கான தேர்தலில் ரஷியா தோல்வி

Date:

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா ஓர் ஆண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து அதை கடுமையாக எதிர்த்து வரும் ஐ.நா. பொதுசபை போரை நிறுத்த ரஷியாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் 193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பொதுசபை இதுவரை, போர் தொடர்பாக ரஷியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 6 தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில் 54 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பல்வேறு அமைப்புகளுக்கு கடந்த வாரம் தேர்தல் நடந்தது. இதில் முக்கியமான 3 அமைப்புகளில் ரஷியா தோல்வியடைந்தது.

பெண்களின் நிலை குறித்த ஆணையத்தில் இடம் பெறுவதற்கான தேர்தலில் ருமேனியாவிடம் ரஷியா தோல்வியடைந்தது. அதேபோல் ஐ.நா. குழந்தைகள் நிறுவனமான யுனிசெப் நிர்வாகக் குழுவின் உறுப்பினர் தேர்தலில் ரஷியா எஸ்டோனியாவிடம் தோற்றது. குற்றத்தடுப்பு மற்றும் குற்றவியல் நீதிக்கான ஆணையத்தில் உறுப்பினராவதற்கான ரகசிய வாக்கெடுப்பில் ஆர்மீனியா மற்றும் செக் குடியரசு ஆகியவற்றால் ரஷியா தோற்கடிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....