இன்றைய ராசிபலன் – 09 ஏப்ரல் 2023

Date:

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் சிலருக்கு சோர்வு தட்டுவதற்கு வாய்ப்புகள் உண்டு. முக்கிய முடிவுகளை எடுப்பதை தள்ளி போடுங்கள். சுய தொழிலில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுடைய தொந்தரவுகளை சந்திப்பர்.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முன் கோபம் தேவையற்ற இழப்புகளை ஏற்படுத்தலாம் கவனம் வேண்டும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பழைய பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எண்ணிய எண்ணங்கள் ஈடேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. பொதுவான முடிவுகளை ஆதரியுங்கள். குடும்ப ஒற்றுமைக்கு பொறுமை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய பாதைகள் பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன பயணம், கவனம் வேண்டும்.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றிகளை காணக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்களுடைய நயமான பேச்சு வார்த்தையால் சிலவற்றை சாதிப்பீர்கள். சுய தொழிலில் வளர்ச்சி அடைந்த நபர் ஒருவரை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கும் முயற்சிகள் பலிதமாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தேவையற்ற நபர்களின் அறிமுகங்களை தவிர்த்து விடுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதுமைகளை படைக்கக்கூடிய எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சேமிப்பு அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பொருளாதாரம் உயரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பலன்களும் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களின் மதிப்பை பெறுவீர்கள். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கக் கூடிய இடத்தில் இருக்க வாய்ப்புகள் உண்டு. சமூக சிந்தனை அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பிள்ளைகளால் சில தொல்லைகள் வர வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அலைந்து திரிந்து தான் சில வேலைகளை முடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகலாம். எதையும் நிதானத்துடன் அணுகுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் பெருமதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் குறுக்கு வழியை நாடாதீர்கள் ஆபத்து வரும்.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விடா முயற்சி நல்ல வெற்றியை கொடுக்கக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. சுப காரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதையும் அரவணைத்து செல்வது நல்லது.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பழைய கடன்களை தீர்க்க முயற்சி மேற்கொள்வீர்கள். எதிர்பாராத வாய்ப்புகளை பெற வாய்ப்பு உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். சுய தொழிலில் லாபம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நடந்து கொள்வது நல்லது.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செய்யும் முயற்சி வீணாக போக வாய்ப்பு உண்டு எனினும் மனம் தளர விடாதீர்கள். புதிய நபர்களுடைய பேச்சில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் மனதை அலைபாய விடாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் போராட்டமான நாளாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை சிலர் சரியாக காப்பாற்ற மாட்டார்கள், இதனால் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பழைய சரக்குகள் விற்பனையாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....