மாமியாரை கொலை செய்த மருமகன்!

Date:

பொல்பித்திகம, அலுத்வேகெதர பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று  08 பிற்பகல் கணவன் மற்றும் மருமகனுக்கு இடையே இடம்பெற்ற மோதலை தடுக்கு சென்ற குறித்த பெண் மருமகனால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த பெண் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

பொல்பித்திகம, அலுத்வேகெதர பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெண்ணின் கணவரும் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....