மீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி!

Date:

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பீரியட் படமாக பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது.

இதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. கர்ணன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனுஷ் தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக 3, வேலையில்லா பட்டதாரி, மாரி, நானும் ரௌடி தான், எதிர் நீச்சல், காக்கி சட்டை போன்ற பல படங்களை தயாரித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக எந்த படங்களையும் தயாரிக்காமல் இருந்துவந்த அவர் தற்போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தை இயக்கியுள்ள நிலையில், தற்போது குழந்தைகளை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கிவருகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....