புத்தாண்டுக்கு சொந்த இடங்களுக்கு செல்வோரிடம் அதிக பேரூந்து கட்டணம் அறவிடப்படுவதாக குற்றச்சாட்டு!

Date:

சித்திரைப் புத்தாண்டுக்காக தங்களது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களிடம் திருத்தப்பட்ட கட்டணத்தை அறவிடாமல் பேரூந்து ஊழியர்கள் அதிக கட்டணம் அறவிடுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக அதிக கட்டணம் அறவிடப்படுவதாக பயணிகள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்திடம் வினவியது.

இதற்கு பதிலளித்த அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜரத்ன மேலதிக சேவைகளை வழங்கினால் அதிக கட்டணத்தை அறவிட வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் இவ்வாறு இடம்பெற்றுள்ளது.

பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக கட்டணத்தை அறவிடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக கட்டணத்தை அறவிடும், பேரூந்துகளை கண்காணித்து அவர்களுக்கு எதிராக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அது தொடர்பான முறைப்பாடுகளை 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....