முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார்…

Date:

தமிழ்நாடு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. தமிழக மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும், நேர்மையுடனும் சேவையாற்றிய அவர், சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.

2005- 2010 வரையிலான 5 ஆண்டுகளில் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக நரேஷ் குப்தா பணியாற்றினார். காந்தியவாதியாக அறியப்படும் இவர், நியாயமான தேர்தலை நடத்துவதற்கு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டவர். 2009 திருமங்கலம் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா சம்பவத்திற்குப் பிறகு, கடுமையான முடிவுகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தினார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....