கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

Date:

கணக்காய்வு சேவை ஆணைக்குழுவுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் ஏப்ரல் 09 ஆம் திகதி பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிச்சத்தியம் செய்துகொண்டனர்.

கணக்காய்வாளர் நாயகம் பதவி அடிப்படையில் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராவார். அதற்கமைய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு டபிள்யூ.பி.சி.விக்ரமரத்ன பதவிச்சத்தியம் செய்துகொண்டார்.

அது மாத்திரமன்றி ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ, நந்தசீலி கொடகந்த, ஞானானந்தராஜா தேவஞானன், ஏ.எம். தர்மஜித் நயனகாந்த ஆகியோரும் பதவிச்சத்தியம் செய்துகொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....