ஐரோப்பாவிற்கு செல்லும் மற்றுமொரு மோசடி

Date:

ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய வழிமுறையை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பல ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்களும், அதிகாரிகளும் இலங்கையில் இல்லாத நிலையில், இந்தியாவில் தங்கி இலங்கை தொடர்பான பணிகளை மேற்கொள்கின்றனர்.

இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவுக்குச் செல்லும் இலங்கையர்கள், தரகர்கள் ஊடாக தவறான தகவல்களைப் பதிவு செய்து, விசா தயாரித்து மோசடி செய்துள்ளனர்.

பின்னர், இதனூடாக ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்லுதல் இந்த புதிய முறை என்று தெரியவந்துள்ளது.

அதன்படி, இவ்வாறான போலியான மோல்டா இராச்சிய வீசாவுடன் இந்தியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கை இளைஞர் ஒருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து சம்பவம் தொடர்பில் அனைத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அந்த இளைஞனின் சகோதரியும் போலி விசாவைப் பெறுவதற்காக இந்தியாவின் புதுடெல்லிக்கு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....