அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய இப்தார் நிகழ்வு

Date:

முஸ்லிங்களின் புனித ரமழான் நோன்பை முன்னிட்டு நடத்தப்படும் தேசிய இப்தார் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (18) அலரி மாளிகையில் நடைபெற்றது.

தேசிய நல்லிணக்கத்துக்கான ஆசிர்வாத நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.

தேசிய ஒருமைப்பாட்டினை வளர்ப்பதற்கு பல தசாப்தங்களாக தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கிவரும் முஸ்லிம் பக்தர்கள் எதிர்காலத்திலும் ஒற்றுமையான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார்.

முஸ்லிங்களின் ரமழான் நோன்பு மாதம் ஆன்மீக சக்தியை மேம்படுத்துகின்ற அதேவேளை, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கின்றது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் கலந்துகொண்டு பயான் உரை நிகழ்த்திய மௌலவிமார்களுக்கு அன்பளிப்புக்களை ஜனாதிபதி வழங்கினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....