விமானங்கள் இயக்கமின்றியுள்ளதாக கூறப்படுவதை மறுக்கும் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம்!

Date:

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் தமது சில விமானங்கள் நிதி சிக்கல்கள் காரணமாக இயக்கமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை மறுத்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம், ஏ320 என் இ ஓ குடும்பத்தைச் சேர்ந்த 5 விமானங்கள், தற்போது புதிய இயந்திரங்களை பொருத்துவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகளாவிய தொழில்துறையில் இயந்திரங்கள் பற்றாக்குறை மற்றும் இந்த வகை விமானங்களுக்கான இயந்திர பழுதுபார்ப்புகளுக்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது என்பதே இதற்கான காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அதன் விநியோகஸ்தர்களுடன் இணைந்து தீர்வொன்றை உருவாக்கி வருவதாகவும், எதிர்வரும் மாதங்களில் உலகளாவிய இயந்திர விநியோகம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

உலகளாவிய பற்றாக்குறை காரணமாகவே விமானங்கள் தரையிறங்கியுள்ளன என்றும் நிதி பற்றாக்குறையால் அல்ல என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....