மும்பை அணிக்கு எதிராக 214 ரன்கள் குவித்தது பஞ்சாப் கிங்ஸ்

Date:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 214 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்துள்ளது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் மேத்யூ ஷார்ட் 11 ரன்னிலும், பிரப்சிம்ரன் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதர்வா டைடே 29 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த லிவிங் ஸ்டோன் 10 ரன்கள் எடுத்தார்.

அணி 4 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தபோது, கேப்டன் சாம் கரன் மற்றும் ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் இணைந்தனர். இருவரும் பொறுப்புடனும் அதிரடியாக விளையாடியும் ரன்களை சேர்த்தனர்.

5 ஆவது விக்கெட்டிற்கு இருவரும் 92 ரன்கள் பார்ட்னர்ஷிப்செய்த நிலையில், ஹர்ப்ரீத் சிங் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக அரைச் சதம் அடித்த சாம் கரன் 55 ரன்னில் வெளியேற, 7 பந்துகளை எதிர்கொண்ட விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 4 சிக்சர்களுடன் 25 ரன்கள் எடுத்தார்.

 

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 214 ரன்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் கேமரூன் கிரீன் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி மும்பை அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....