கடைசி ஓவரில் மொத்தமாக மாறிய போட்டி: வெற்றி பெற வேண்டிய நிலையில் கோட்டை விட்ட லக்னோ அணி

Date:

ஐபிஎல் போட்டியில் லக்னோ மற்றும் குஜராத்திற்கு இடையேயான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

பிஎல் போட்டியின் 30வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின டாஸில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய கில் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா, சகா ஜோடி சிறப்பாக ஆடி ஓட்டம் சேர்த்தது.

சகா 47 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அதற்கு பின் ஹர்திக் பாண்டியா ஒற்றை ஆளாக நின்று ஆடி கடைசி ஓவர்களில் சிக்சர்களை விளாசினார். அதிரடியாக ஆடிய அவர் 50 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

கடைசில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 66 ஓட்டங்களும், சகா 47 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.

லக்னோ அணியில் சிறப்பாக பந்து வீசிய குருனால் பாண்டியா, ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

135 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி ஆரம்பத்தில் வேகமாக ஓட்டம் சேர்த்தது. பவர் பிளேவில் மட்டும் ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ஓட்டங்கள் குவித்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டேயிருக்க கேஎல் ராகுல் நிதானமாக ஓடி வெற்றியின் இலக்கை நோக்கி ஓட்டங்களை குவித்தார்.

கடைசி 2 ஓவரில் 17 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை எடுக்க முடியாமல் வரிசையாக களமிறங்கிய வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

19 ஓவரை வீசிய முகமது சமி 5 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து சிறப்பாக பந்து வீசினார். கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மோகித் சர்மா பந்து வீசினார்.

தொடர்ந்து நான்கு விக்கெட்டுகள் ஒரே ஓவரில் விழுக ஆட்டம் கடைசி நேரத்தில் குஜராத் பக்கம் திரும்பியது. கே.எல்.ராகுல் 61 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து குஜராத் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசிய மோகித் சர்மா 2 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெடுகளையும் வீழ்த்தினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....