காதலியின் குழந்தையை கொதிக்கும் நீரில் அமுக்கி கொன்ற கொடூரன்

Date:

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், காதலியின் குழந்தையை கொதிக்கும் நீரில் அமுக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், காதலியின் குழந்தையை கொதிக்கும் நீரில் அமுக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து குழந்தையை கொன்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக குழந்தையின் தாயார் அளித்த முறைப்பாடு அடிப்படையில், கொலையாளி மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பின்னர் கொலை செய்தவர், கெட் பகுதியைச் சேர்ந்த விக்ரம் ஷரத் கோலேகர் என அடையாளம் காணப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் அந்த பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையின்படி, ஏப்ரல் 6 ஆம் திகதி காலை, விக்ரம் ஷரத் கோலேகர், கேடில் உள்ள பெண்ணின் வீட்டிற்குச் சென்று, பெண்னின் குழந்தையை கூட்டி சென்று கொதிக்கும் நீரில் அமுக்கி கொன்றுள்ளார். அப்போது அந்த பெண் குழந்தையை குற்றவாளியின் பாதுகாப்பில் விட்டுவிட்டு வெளியில் சென்றதாக தெரிகிறது. அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண், குழந்தையின் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, 15 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கணவரை பிரிந்து வாழும் அந்த பெண்ணை, விக்ரம் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்த போது அந்த பெண் அதற்கு மறுத்ததால் மனமுடைந்த விக்ரம் இந்த கொலையை செய்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது பொலிஸ் காவலில் உள்ளதால், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....