24 பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை ; 56 வயது ஆசிரியர் செய்த வேலை

Date:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 1 வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்களும், 129 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் லட்சுமணன் ( 56) என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு முதல் பள்ளி மாணவிகளை அடிக்கடி அழைத்து தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது என மாணவிகளை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், நாளுக்கு நாள் ஆசிரியரின் தொல்லை தாங்க முடியாததால் வேறு வழியில்லாமல் மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோரிடம் கண் கலங்கிய படி தெரிவித்தனர். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக தண்டராம்பட்டு அனைத்து மகளிர் பொலிஸ் நிலையித்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

இந்த முறைப்பாடு அப்படிடையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோரிடம் வீடு வீடாக சென்று பொலிஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியர் லட்சுமணன் மாணவிகள் மீது பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து ஆசிரியர் லட்சுமணனை பொலிஸார் கைது செய்தனர். கைதான ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட 10 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளிடம் ஆசிரியரே பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....