பிரபல செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ.யின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

Date:

செய்தி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான ஏ.என்.ஐ. சமூக ஊடக தளங்களிலும் செயல்பட்டு வருகிறது. இதன்படி, வெளிவரும் ஏ.என்.ஐ. டுவிட்டருக்கு 76 லட்சம் பயனாளர்கள் பாலோயர்களாக இருந்து வருகின்றனர்.

ஏ.என்.ஐ.யின் டுவிட்டர் கணக்கு பக்கம் முன்னறிவிப்பின்றி திடீரென இன்று முடங்கியது. இதற்கான காரணம் தெரிய வராமல் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்நிறுவனத்தின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ், ஏ.என்.ஐ. டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டதற்கான காரணங்களை தனது தனிப்பட்ட கணக்கை பயன்படுத்தி டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.

அதில், 76 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டு செயல்படும் இந்தியாவின் மிக பெரிய செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ.யை டுவிட்டர் நிறுவனம் முடக்கி உள்ளது. அதனுடன் இந்த மெயிலையும் அனுப்பி உள்ளது.

அதில், 13 வயதுக்கு கீழ் உள்ளது என தெரிவித்து உள்ளது. எங்களுடைய தங்க நிற டிக் குறியீடு பறிக்கப்பட்டது. அதற்கு பதிலாக நீலநிற டிக் (புளூ டிக்) குறியீடு மாற்றி வழங்கப்பட்டது. தற்போது அது முடக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இந்த டுவிட்டர் கணக்கின் உரிமையாளர் குறைந்தபட்ச வயது தேவையை நிறைவேற்றவில்லை என்று கூறி கணக்கு முடக்கப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.

அந்த மெயிலானது, டுவிட்டர் கணக்கை தொடங்க குறைந்தது 13 வயது இருக்க வேண்டும் என தெரிவிக்கின்றது. நீங்கள் தேவையான அந்த வயது அடையவில்லை. அதனால், உங்களது கணக்கு முடக்கப்படுகிறது. டுவிட்டரில் இருந்தும் நீக்கப்படும் என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று என்.டி.டி.வி.யின் டுவிட்டர் கணக்கும் முடங்கி உள்ளது. இதற்கான காரணம் என்னவென தெரிய வரவில்லை.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மனைவி கொலை கணவருக்கு மரண தண்டனை !

எட்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை...

ஹசரங்கவுக்கு பதில் துஷான் ஹேமந்த

வனிந்து ஹசரங்க காயத்தில் இருந்து மீண்டு வருவதால் ஐசிசி கிரிக்கெட் உலகக்...

உக்ரைன் தாக்குதலில் ரஷிய கடற்படை தளபதி கொல்லப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கி 1½ ஆண்டுகளை தாண்டிவிட்டது. ஆனாலும்...

இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு...