பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 11 வயது பிக்கு

Date:

11 வயதுடைய பிக்கு ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் விகாரையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயாகல கொகரதெனிய விகாரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிக்குவின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

2021ஆம் ஆண்டு முதல் குறித்த பிக்கு, விகாராதிபதி தேரர் மற்றும் இரண்டு தேரர்களால் அவர்களது அறைகளில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த பிக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பயாகல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் உபாந்த டி சில்வா தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....