டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு

Date:

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், அவரது பதவியை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பஜ்ரங் பூனியா, சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திரங்கள் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர்.

அதனை தொடர்ந்து, குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்தது. பாலியல் புகார் தெரிவித்து 3 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லாத நிலையில் டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் நடத்தினர். டெல்லி ஜந்தர்மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பஜ்ரங் புனியா, விக்னேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2 மாதங்களுக்கு பிறகும், தங்களுக்கு மிரட்டல்கள் வருவதாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில், மல்யுத்த வீரர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு சானியா மிர்சா, நீரஜ் சோப்ரா, இர்பான் பதான் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ‘இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது.

அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுகை அப்துல்லா இன்று தி.மு.க சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உக்ரைன் தாக்குதலில் ரஷிய கடற்படை தளபதி கொல்லப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கி 1½ ஆண்டுகளை தாண்டிவிட்டது. ஆனாலும்...

இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு...

சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கிணற்றில் வீசிய சிறுவர்கள்

இந்தியாவின் சித்தூர் மாவட்டம், பென்முருவைச் சேர்ந்த பவ்யா ஸ்ரீ என்ற சிறுமி...

பெண் ஒருவரை கடத்தி கப்பம் கோரல் !

பெண்ணொருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள்...