மும்பை அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்… 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

Date:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 17.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக நடந்த கடந்த 5 போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த மோசமான சாதனையை சென்னை அணி இன்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்களில் நெஹல் வதேரா 64 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்களும், திரிஸ்தன் ஸ்டப்ஸ் 20 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி 139 ரன்கள் சேர்த்தது.

இந்த இன்னிங்ஸில் மும்பையால் ஒரேயொரு சிக்சர் மட்டுமே அடிக்க முடிந்தது. குறிப்பாக சென்னை அணியின் பவுலர்கள் மும்பை பேட்ஸ்மேன்களை திணறடித்து ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சஹார், தேஷ் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியபோது, தொடக்க பேட்ஸ்மேன்கள் ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்னும், டெவோன் கான்வே 44 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

 

குறைவான இலக்கு என்பதால் சென்னை பேட்ஸ்மேன்கள் நிதானத்துடன் ரன்களை சேர்த்தனர். அஜிங்யா ரஹானே 17 பந்தில் 21 ரன்னும், அம்பதி ராயுடு 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே 26 ரன்கள் சேர்க்க 17.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....