குதிரை சவாரி செய்த பிரபஞ்ச அழகி இறுதி போட்டியாளரின் சோக மரணம்

Date:

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாடல் அழகி சியன்னா வெயிர் (வயது 23). 2022-ம் ஆண்டு நடந்த பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொண்ட அவர், இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டவர்.

கடந்த ஏப்ரல் 2-ம் திகதி ஆஸ்திரேலியாவில் வின்ட்சார் போலோ கிரவுண்டில் குதிரை சவாரி மேற்கொண்டார்.

அப்போது, அவரது குதிரை திடீரென சரிந்து, விழுந்து உள்ளது.

சியன்னாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மீட்டு, வெஸ்ட்மீட் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பல வாரங்களாக உயிர் காக்கும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது.

எனினும், அதில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், உயிர் காக்கும் சிகிச்சையை எடுத்து விடும்படி அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, அவர் உயிரிழந்து உள்ளார்.

ஆங்கில இலக்கியம் மற்றும் உளவியல் பாடங்களில் இரட்டை பட்டப்படிப்பை படித்து உள்ள அவர், 3 வயது இருக்கும்போது, குதிரை சவாரி செய்ய தொடங்கினார்.

இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு இருந்த அவர், அந்நாட்டில் தனது பேஷன் தொழில் மற்றும் சமூக நெட்வொர்க்கை தொடர போகிறேன் என உள்ளூர் ஊடகங்களிடம் கூறினார்.
எனது சகோதரி, உறவினர்களுடன் அதிக நேரம் செலவிட போகிறேன் என்றும் கூறினார்.
அவரது சோக மரணம் நடந்து உள்ளது. அவரது மறைவுக்கு தோழிகள், குடும்பத்தினர் மற்றும் மாடல் தொழிலில் உள்ள நண்பர்கள் சமூக ஊடகம் வழியே இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....