ரஷிய ஆதரவு எழுத்தாளர் பயணித்த காரில் குண்டு வெடிப்பு

Date:

உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 438-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

இந்த போரில் பல்வேறு முக்கிய பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றன. குறிப்பாக, போரில் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு கருத்து தெரிவித்த நபர்களையும் மர்மான முறையில் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

ரஷிய ஆதரவு எழுத்தாளர் சகர் பெர்லிபினை குறிவைத்து கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷிய ஆதரவு எழுத்தாளர் பெர்லிபின் நேற்று மாஸ்கோவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் நிஸ்னி நவ்கொரொட் நகரில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.

அந்த கார் திடீரென வெடித்து சிதறியது. காரில் வெடிகுண்டு பொறுத்தப்பட்டிருந்தது. இந்த கார் குண்டுவெடிப்பில் கார் டிரைவர் உயிரிழந்தார். எழுத்தாளர் பெர்லிபின் படுகாயமடைந்தார். அவரை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....