காலாவதியாகும் குடியேற்றக் கொள்கை

Date:

அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டானர். தற்போது அமுலில் இருக்கும் சர்ச்சைக்குரிய குடியேற்றக் கொள்கையானது வியாழக்கிழமை நள்ளிரவுடன் காலாவதியாகும் நிலையில், மக்களிடையே புதிய அச்சம் எழுந்துள்ளது.

டெக்சாஸ் நகரமான எல் பாசோவில் திரண்டுள்ள புலம்பெயர் மக்களில் பெரும்பாலானோர் வரவிருக்கும் விதி மாற்றங்கள் குறித்து குழப்பத்தில் உள்ளனர். கடந்த பல நாட்களாக நகர வீதிகளில் உள்ள தற்காலிக முகாம்களில் படுமோசமான சூழலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற ஒரு நிலை முன்னர் எதிர்கொண்டதே இல்லை என தெரிவித்துள்ளார் மேயர் Oscar Leeser. ஆனால் அமுலுக்கு கொண்டுவரப்படும் புதிய விதிகள் மிக மோசமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எல்லையில் நிலைமை இன்னும் கொஞ்சநாள் பதற்றமாகவே காணப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியே, புதிய விதிகள் மோசமாக இருக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

2020ல் முதக்முறையாக அமுலுக்கு கொண்டுவரப்பட்ட விதி 42 என்பது அமெரிக்க அதிகாரிகளுக்கு உச்ச அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. அதாவது மெக்சிகோவில் இருந்து எல்லையை கடக்க முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரை உடனடியாக வெளியேற்ற முடியும்.

தற்போது இந்த விதி 42 காலாவதியாக இருப்பதால், புலம்பெயர்ந்தோரின் வருகையால் அதிகாரிகள் திணறிப்போக வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். ஏற்கனவே, 10,000 பேர்கள், வாய்ப்பை எதிர்பார்த்து எல் பாசோ நகரத்தில் திரண்டிருப்பதாக நகர மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது கண்டிப்பாக கால்பந்து மைதானத்தில் ஏற்படும் கூட்ட நெரிசல் போன்ற சூழலை உருவாக்கும் என்ற அச்சத்தையும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதி 42 என்பது கொஞ்சம் சாதகமாக இருந்தாலும், புதிய விதியால் சொந்த நாட்டுகே திருப்பி அனுப்பப்படும் சூழல் உருவாகலாம் எனவும், அது தங்களின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்ற அச்சத்தையும் சிலர் முன்வைத்துள்ளனர்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்- துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்கள் அணி அசத்தல்..!

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது....

3-வது ஒரு நாள் போட்டி : இந்திய அணிக்கு 353 ஓட்டங்கள் இலக்கு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு...

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பர்...

5 புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்

  ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புகள் 5 புதிய பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.   ஜனாதிபதி...