79 வயது பிரபல ஹாலிவுட் நடிகருக்கு 7-வது குழந்தை

Date:

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் நீரோ. இவர் காட்பாதர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். தி ஐரிஷ் மேன், டாக்சி டிரைவர், ரேஜிங் புல், கேப் பியர் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.

ராபர்ட் நீரோ அமெரிக்க நடிகை டியான்னே அபோட்டை 1976-ம் ஆண்டு திருமணம் செய்து 1988-ல் விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

பின்னர் மாடல் அழகி ஸ்மித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜூலியன், ஆரோன் ஆகிய இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து கிரேஸ் ஹைடவரை மணந்தார். இவர்களுக்கு எலியட், ஹெலன் கிரேஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

ராபர்ட் நீரோவுக்கு தற்போது 79 வயது ஆகிறது. இந்த நிலையில் 7-வது குழந்தைக்கு தந்தையாகி இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து ராபர்ட் நீரோ அளித்துள்ள பேட்டியில், எனக்கு ஏற்கனவே ஆறு குழந்தைகள் உள்ளன. 7-வது குழந்தை சமீபத்தில் பிறந்து இருக்கிறது.

7-வது குழந்தைக்கு தந்தையான நிலையிலும் இன்னும் எனக்கு குழந்தைகள் பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். 7-வது குழந்தையின் தாய் யார் என்பதை சொல்ல மறுத்து விட்டார்.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...