ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வெங்கடேஷ் ஐயர் – வருண் சக்கரவர்த்தி

Date:

ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வெங்கடேஷ் ஐயர்- வருண் சக்கரவர்த்தியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்து வருகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இப்போட்டியின் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், சென்னைக்கு வந்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் நடிகர் ரஜினிகாந்த்தை சென்னையில் இருக்கும் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது நடிகர் ரஜினிகாந்த்துடன் அவர்கள் மகிழ்ச்சியாக உரையாடினர்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://twitter.com/surbalu/status/1658076222390439936

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....