“மனதை என்னமோ செய்கிறது”

Date:

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து நேற்று இப்படத்தின் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் வெளியானது. நடிகர் வடிவேலு பாடியுள்ள இந்த பாடல், தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த பாடல் குறித்து நடிகர் சூரி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன், மனதை என்னமோ செய்கிறது இந்த பாடல். மாமன்னன் படக்குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்- துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்கள் அணி அசத்தல்..!

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது....

3-வது ஒரு நாள் போட்டி : இந்திய அணிக்கு 353 ஓட்டங்கள் இலக்கு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு...

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பர்...

5 புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்

  ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புகள் 5 புதிய பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.   ஜனாதிபதி...