“உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் உண்டு”

Date:

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், “புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு கிடைத்து இருந்தால் அவரை விட சூப்பராக நடித்து இருப்பேன்” என்று பேசியதாக சர்ச்சை கிளம்பியது. ராஷ்மிகாவை குறை சொல்லி அவமதித்து விட்டதாக அவரது ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷை விமர்சித்தனர். இது வலைத்தளத்தில் பரபரப்பானது.

இதற்கு விளக்கம் அளித்து ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மையில் ஒரு நேர்காணலின்போது என்னிடம், தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்?” என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில், “எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும், எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் தெலுங்கு படங்களில் நடிப்பேன். உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்” என பதிலளித்தேன்.

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ‘புஷ்பா’ படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை கூறவில்லை. ராஷ்மிகா மந்தானாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும், திரையுலகைச் சார்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள் என்பதை நான் நன்றாக புரிந்துகொண்டேன். நமக்குள் விளக்கம் அளித்துக்கொள்ள எந்த தேவையும் இல்லை என நினைக்கிறேன். உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் உண்டு. உங்கள் ‘ஃபர்ஹானா’ திரைப்படத்திற்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....