பிளஸ் 1, எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!

Date:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19-ம் திகதி வெளியானது. ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர்.

தேர்வு எழுதிய 9,14,320 மாணவர்களில் 4,55,017 மாணவிகளும், 4,59,303 மாணவர்களும் ஆவர். இதில் 8,35,614 பேர் வெற்றி பெற்றனர். அதில் 4,04,904 மாணவர்களும், 4,30,710 மாணவிகளும் ஆவர்.10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.66 சதவீதம் மாணவிகளும், 88.16 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

இந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வு தேர்ச்சியடையாத மாணவர்கள் இன்று (மே 23) முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் மே 27ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்.

10ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு ஜூன் 27ம் திகதி முதல் ஜூலை 4ம் திகதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதேபோல இந்த கல்வி ஆண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு 11ஆம் தேர்வு தேர்ச்சியடையாத மாணவர்கள் இன்று (மே 23) முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மேலும், தட்கல் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் மே 31 வரையும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு dge.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....