ஐதராபாத்தில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது நடிகர் சரத்பாபு உடல்

Date:

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ள மூத்த நடிகரான சரத்பாபுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கிட்னி, கல்லீரல் உள்ளிட்ட உள் உறுப்புகள் செயல் இழந்து வந்தன. உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஒரு மாதத்துக்கும் மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு நேற்று உடல்நிலை மோசம் அடைந்து மரணம் அடைந்தார்.

மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடல் நேற்று மாலை ஐதராபாத்தில் உள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தெலுங்கு நடிகர்-நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சரத்பாபு உடல் வேனில் ஏற்றப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த நடிகர் சரத்பாபு உடல் தி.நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. அதன் பின்னர் இன்று பிற்பகல் சரத்பாபு உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....