ரஷ்யாவிற்குள் நுழைய முயன்ற உக்ரைன் விரட்டியடித்த ரஷ்ய ராணுவம்

Date:

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கியது, தற்போது கிட்டத்தட்ட 16 மாதங்களாக மிக நீண்ட போராக நீடித்து வருகிறது.

ரஷ்ய படைகள் உக்ரைனின் சில இடங்களை பிடித்து வைத்து இருக்கும் நிலையில், அதனை மீட்கும் நடவடிக்கையில் உக்ரைனிய ஆயுதப் படை எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் தலைநகர் கீவ் மற்றும் உக்ரைனிய நகரங்கள் மீது தொடர்ந்து 3 நாட்கள் ரஷ்யா நடத்திய வான் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் ரஷ்யாவின் பெல்கோரோட்(Belgorod) பிராந்தியத்திற்குள் நுழைய முயன்ற உக்ரைனிய ராணுவத்தின் நான்கு முயற்சிகள் தோல்வியடைந்து இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்களின் அத்துமீறிய ஊடுருவல் முயற்சியை ரஷ்ய ராணுவம் தடுத்து இருப்பதாகவும், இதில் 50 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

மேலும் எதிரிகளை விரட்ட ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல் காட்சிகளையும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...