சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்து- மீட்பு பணிகள் தீவிரம்

Date:

கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பலாஷோர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. எனினும் ரயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் வெளியாகவில்லை. சரக்கு ரயிலுடன் மோதியதில் ரயில் தடம் புரண்டதாகவும் தகவல் பரவி வருகிறது.

ரயிலின் 8 பெட்டிகள் வரை தடம் புரண்டதாகவும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வரை இயக்கப்படுகிறது. வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்று இருப்பதாகவும் இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடப்பதாகவும் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....