இங்கிலாந்து 524 ரன்கள் குவித்து டிக்ளேர்..!

Date:

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வரும் அயர்லாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் இங்கிலாந்தில் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 172 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டம் இழந்தது.

இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் க்ராவ்லி மற்றும் டக்கட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் க்ராவ்லி 56 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து டக்கட்டுடன் ஓலி போப் ஜோடி சேர்ந்தார்.

இந்த இணை அயர்லாந்தின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் அடித்து அசத்தினர். இருவரது விக்கெட்டுளையும் எடுக்க முடியாமல் அயர்லாந்து அணியினர் சிரமப்பட்டனர்.

இதில் டக்கட் இரட்டை சதத்தை நெருங்கிய வேளையில் 182 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஓலி போப் இரட்டை சதம் அடித்தார். அவர் 205 ரன்னும், ரூட் 56 ரன்னும் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து இங்கிலாந்து அணி 82.4 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 524 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து 352 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து அயர்லாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்- துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்கள் அணி அசத்தல்..!

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது....

3-வது ஒரு நாள் போட்டி : இந்திய அணிக்கு 353 ஓட்டங்கள் இலக்கு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு...

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பர்...

5 புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்

  ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புகள் 5 புதிய பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.   ஜனாதிபதி...