இலங்கையின் முப்படையினருக்கும் இஸ்ரேலில் பயிற்சி

Date:

இலங்கையின் முப்படையினருக்கும் இஸ்ரேலில் பயிற்சிகளை விரிவுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புதுடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பு உதவியாளர் கேணல் அவிஹாய் சஃப்ரானி, கோட்டை ஸ்ரீஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சின், பாதுகாப்புச் செயலாளர் நாயகம் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளனர்.

இதன்போதே பாதுகாப்பு செயலாளர் குணரத்ன மற்றும் கேணல் சப்ரானி ஆகியோர், இலங்கை முப்படை வீரர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் தமிழ் இயக்கங்கள் ஆயுதப்போராட்டங்களை ஆரம்பித்த காலத்தில் இஸ்ரேல், இலங்கைக்கு முன்னிலை ஒத்துழைப்புக்களை வழங்கி வந்த நாடாக செயற்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....