ரஜினியின் ஜெயிலர் பட டப்பிங் பணி தொடங்கியது

Date:

நெல்சன் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உட்பட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜெயிலர்.

பல மாதங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

முதல் கட்டமாக இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள விநாயகன் டப்பிங் பேசி வருகிறார். அது குறித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருவதால் அந்த படத்தை முடித்துவிட்டு அவர் தனக்கான டப்பிங்கை பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்துக்காக அனிருத் இசையில் உருவாகியுள்ள இரண்டு பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....