உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி வடிவம் அடுத்த மாதம்

Date:

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி வடிவம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இராஜதந்திர சமூகத்துடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் அதன் விடயங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான வரைவுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்தவுடன், டிசம்பருக்குள் அது செயற்பாட்டுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது வழக்கமான அமர்வுகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நடவடிக்கையை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து நாளைய தினம் வாய்மூல அறிக்கை ஒன்றை வழங்கவுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....