ஜிம்பாப்வேக்கு எதிராக நெதர்லாந்து 315 ரன்கள் குவிப்பு…!

Date:

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் ஒரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ’டவுட் களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு சிறப்பான தொடக்கம் அமைத்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதில் விக்ரம்ஜித் சிங் 88 ரன், மேக்ஸ் ஓ’டவுட் 59 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய வெஸ்லி பாரேசி 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 83 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை 315 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் சிக்கந்தர் ராசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி ஆட உள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....