ஹட்டன் போடைஸ் பகுதியில் விலங்கு வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (21) முற்பகல் ஹட்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போடைஸ் வனப்பகுதியில் காட்டு எருமையை வேட்டையாடிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து விற்பனைக்காக பொதி செய்யப்பட்ட 54 கிலோகிராம் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒரு தொகை பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட இறைச்சி மனித பயன்பாட்டிற்கு உகந்ததா என்பதனை கண்டறிவதற்காக சுகாதார வைத்திய அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




