உலகக் கோப்பை தாங்கள் விளையாடவுள்ள போட்டிக்கான இடத்தை மாற்ற வேண்டும் என்ற பாகிஸ்தான் அணி கோரிக்கை நிராகரிப்பு

Date:

13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5-ம் திகதி முதல் நவம்பர் 19-ம் திகதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே உலகக் கோப்பை போட்டிக்கான வரைவு அட்டவணை சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதன்படி தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் (அக்டோபர் 5-ம் திகதி ) ஆமதாபாத்தில் மோதுகின்றன

இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ம் திகதி சென்னையில் சந்திக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான மோதல் அக்டோபர் 15-ம் திகதி ஆமதாபாத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது

இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டியில் தங்களுக்கான போட்டி நடைபெறும் 2 இடங்களை மட்டும் மாற்றும்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவிலும் (அக்டோபர் 20-ம் திகதி ), ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சென்னையிலும் (அக்டோபர் 23-ம் திகதி ) விளையாடும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும் அட்டவணையை விரும்பவில்லை என்பதால் ஆப்கானிஸ்தான் , ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கான இடத்தை மாற்றும்படி வலியுறுத்தி இருக்கிறது .

இந்த நிலையில் போட்டிக்கான இடத்தை மாற்ற வேண்டும் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதனால் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி சென்னை மற்றும் பெங்களுருவில் நடைபெறுவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....